'வியூஸ்' அதிகம்.. லட்சக்கணக்குல 'பணமும்' கெடைக்குது.. போலீசை 'அதிரவைத்த' இளைஞர்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பணம் அதிகம் சம்பாதிக்கும் நோக்கில், வனவிலங்குகளை வேட்டையாடிய 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் வனவிலங்குகளை வேட்டையாடி சமைத்து அதை யூடியூபில் சிலர் வீடியோவாக வெளியிடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் மாவட்ட வனத்துறையிடம் தகவல் அளிக்க அவர்கள் இதுதொடர்பாக அண்ணாதுரை, சுப்பிரமணி, கார்த்திக், அலெக்ஸ் பாண்டியன் என்னும் 4 இளைஞர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதுதொடர்பாக அந்த இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி இருக்கின்றனர்.
விசாரணையில், காடுகளில் உள்ள விலங்குகளை வேட்டையாடி, அதை சமைத்து சாப்பிடும் வீடியோக்களை வில்லேஜ் ஹண்டர் என்னும் யூடியூப் சேனலில் இளைஞர்கள் பதிவேற்றிய விவரம் தெரிய வந்துள்ளது. ஏன் இப்படி செய்தீர்கள்? என்று போலீசார் கேட்டதற்கு இதுபோன்ற வீடியோக்களுக்கு லட்சக்கணக்கில் பணம் கிடைப்பதாகவும், வியூஸ் அதிகம் கிடைப்பதாகவும் அந்த இளைஞர்கள் கூலாக பதில் சொல்லி போலீசாரையே அதிர வைத்துள்ளனர்.