எனது சகோதரியின் 'உடலை' புதைக்க தான் முடியும்.. எரிக்க 'எதுவும்' இல்லை.. கதறும் சகோதரன்!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் வன்கொடுமை குறித்து புகார் அளித்ததால் 5 பேர் கொண்ட கும்பலால் எரிக்கப்பட்ட இளம்பெண், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 11.40 மணிக்கு மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கற்பழிப்புகளின் கூடாரமாக மாறிவிட்டது என விமர்சனம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்,'' இளம்பெண் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும்,'' என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய மகள் மரணம் குறித்து அவரின் தந்தை கூறுகையில்,'' ஹைதராபாத் போல என்னுடைய மகளின் மரணத்திற்கு காரணமானவர்களும் என்கவுண்டரில் சுட்டு கொல்லப்பட வேண்டும்,'' என கோரிக்கை விடுத்துள்ளார். அந்த பெண்ணின் சகோதரனின் இதுகுறித்து,''என் சகோதரியின் வாழ்க்கையை நாசமாக்கியவர்கள் தூக்கிலிடப்பட வேண்டும்.
அவர்கள் உயிருடன் இருக்கக்கூடாது. அந்த 5 பேரும் தூக்கில் தொங்குவதை காண்பதற்காகவே நான் வாழ விரும்புகிறேன். எனது சகோதரியின் உடலை அடக்கம்தான் செய்ய முடியும். எரிப்பதற்கு அவர் உடம்பில் ஒன்றுமே இல்லை,'' என கண்ணீர் மல்க தெரிவித்தார்.