'ஆடிப்பாடி' டிக் டாக் செய்த மனைவி.. 'தலைக்கேறிய' ஆத்திரம்.. கழுத்தை நெரித்து 'கொன்ற' கணவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

டிக் டாக் வீடியோக்களால் தொடர்ந்து பல்வேறு விபரீதங்கள் குடும்பத்தில் நிகழ ஆரம்பித்துள்ளன. சிலர் வித்தியாசமாக வீடியோ செய்ய ஆசைப்பட்டு உயிரையும் இழந்து விடுகின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக பல்வேறு சம்பவங்கள் இருந்தாலும் டிக் டாக் மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிமாகிக் கொண்டே தான் செல்கிறது.

'ஆடிப்பாடி' டிக் டாக் செய்த மனைவி.. 'தலைக்கேறிய' ஆத்திரம்.. கழுத்தை நெரித்து 'கொன்ற' கணவர்!

அந்தவகையில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஒருவர் டிக் டாக் செய்த மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் தல்லூர் கிராமத்தை சேர்ந்த பாச்சூ என்பவர் அந்த ஊரில் டெய்லராக இருக்கிறார். இவருக்கு பாத்திமா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

பாத்திமா டிக் டாக் வீடியோக்களில் அதிக ஆர்வம் காட்டி இருக்கிறார். அதற்காக வீட்டுக்கு அருகில் உள்ள வயல்வெளி, தோட்டம் ஆகிய இடங்களுக்கு சென்று ஆடிப்பாடி வீடியோ எடுத்துள்ளார். இதை பாச்சூ கண்டித்தும், பாத்திமா இந்த பழக்கத்தை விடவில்லை என தெரிகிறது. மேலும் பாத்திமா மீது பாச்சூவுக்கு சந்தேகம் இருந்ததால் இருவருக்கும் இடையில் அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டுள்ளன.

இந்தநிலையில் இன்று காலை வீட்டில் உள்ள அறை ஒன்றில் பாத்திமா தூக்கில் தொங்குவதாக பாச்சூ சத்தம் போட்டுள்ளார். இதைக்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் பாத்திமாவின் உடலை கீழே இறக்கி இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

அப்போது பாச்சூ, பாத்திமா மீது சந்தேகப்பட்டு அவரை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து பாச்சூவை கைது செய்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.