'நாங்க ஒரு பக்கம் கஷ்டப்படுறோம்'... 'மறுபக்கம் சைலண்டா கொரோனாவை பரப்பிய கும்பல்'... சேலத்தில் அதிரடி கைது!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சேலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்த 16 பேர், கொரோனாவை பரப்பியதற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
மத போதனைக்காக இந்தோனேசியாவிலிருந்து சேலம் வந்த, 11 பேர் உட்பட 6 பேரை மாவட்ட நிர்வாகம்.தனிமைப்படுத்தியது. இதையடுத்து அவர்களுக்கு மேற்கொண்ட பரிசோதனையில் இந்தோனேசியர்கள் உட்பட 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சையில் குணமடைந்த 5 பேரும், தனிமைப்படுத்தப்பட வேண்டிய காலம் முடிந்த 11 பேரும் கடந்த மார்ச் 11ம் தேதி சேலம் வந்துள்ளனர்.
இதையடுத்து வெளிநாட்டிலிருந்து வந்ததை மறைந்து, மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலை பொருட்படுத்தாமல், மற்றவர்களுக்கும் கொரோனவை பரப்பிய குற்றத்திற்காக அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து அவர்கள் அனைவரும் காணொளி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட நீதிபதி, 16 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனால் இந்தோனேஷியர்கள் 16 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.