யாரெல்லாம் இந்த 'ஆப்' யூஸ் பண்றீங்க...? 'இது யூஸ் பண்றது நமக்கு பாதுகாப்பு இல்ல...' உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை...!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிக அளவில் பயன்பாட்டில் உள்ள ஜூம் என்ற செயலியை உபயோகிப்பது பாதுகாப்பானது இல்லை என மத்திய  உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் இந்த 'ஆப்' யூஸ் பண்றீங்க...? 'இது யூஸ் பண்றது நமக்கு பாதுகாப்பு இல்ல...' உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை...!

நாடு முழுவதும் பரவும் கொரோனா வைரஸ் அச்சத்தால் மத்திய அரசு மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் வீட்டில் முடங்கிய மக்கள் பெரும்பாலும் தங்களுடைய குழந்தைகளுடனும், குடும்ப உறுப்பினர்களுடனும் பொழுதை கழிக்கின்றனர். ஒரு சிலர் இப்பொழுதும் எந்நேரமும் செல்போனுடன் நேரத்தை கடக்கின்றனர்.

ஐ.டி நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு இந்த சலுகைகள் எல்லாம் இல்லை. வீட்டிலிருந்த படியே தங்களின் அலுவலக வேலைகளை பார்க்கின்றனர். இவ்வாறு பணிபுரியும் பெரும்பாலானோர் பயன்படுத்தும் ஒரு ஆன்லைன் செயலியாக உள்ளது ஜூம்.

இந்த கொரோனா ஊரடங்கு நேரத்தில் கூகுள் பிளே ஸ்டோரிலில் இலவசமாக கிடைக்கும் இந்த வீடியோ செயலியை தரவிறக்கம் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

ஜூம் ஆன்லைன் செயலி மூலம் பல்வேறு ஐ.டி மற்றும் தனியார் நிறுவனங்கள் தங்களின் கலந்துரையாடல்களை நடத்துகின்றனர். இந்த செயலியின் உதவியால் ஒரே நேரத்தில் பலர் கலந்துரையாட முடியும்.

மேலும் ஒரு சில அரசு அலுவலக கலந்துரையாடல்களிலும், சென்னை உயர்நீதிமன்றத்தில்கூட இந்த செயலியைப் பயன்படுத்தி வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நேற்று இந்த ஜூம் செயலியை பயன்படுத்தி வரும் சுமார் 5 லட்சம் பேரின் கணக்குகளை ஹேக் செய்யப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இதனால் பதற்றம் அடைந்த ஒரு சில பயனாளர்கள் இந்த செயலியை டெலீட் செய்தும் வருகின்றனர்.

இதை உறுதிபடுத்தும் விதமாக இன்று மத்திய உள்துறை அமைச்சகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் 'ஜூம்' செயலி பாதுகாப்பானது அல்ல என்றும் அதில் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இதனை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக இனி இந்த செயலியை பயன்படுத்துவதை  தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.