‘திடீர்னு இப்டி நடக்கும்னு யாரும் எதிர்பாக்கலயே’.. சோகமாக நாடும் திரும்பும் மற்றொரு நட்சத்திர வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் மாமியார் காலமானதால் அவர் நாடு திரும்பியுள்ளார்.

‘திடீர்னு இப்டி நடக்கும்னு யாரும் எதிர்பாக்கலயே’.. சோகமாக நாடும் திரும்பும் மற்றொரு நட்சத்திர வீரர்!

உலகக்கோப்பை லீக் தொடரில் இலங்கை அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த செவ்வாய்கிழமை நடைபெறுவதாக இருந்த வங்கதேசம் மற்றும் இலங்கைக்கு இடையேயான போட்டி மழையால் கைவிடப்பட்டது. இது இலங்கைக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இலங்கை அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான நுவான் ப்ரதீப் காயம் காரணமாக விலகியிருப்பது கூடுதல் பின்னடைவாக கருதப்படுகிறது. ஏனென்றால் இலங்கை அணி தான் வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் நுவான் ப்ரதீப் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இலங்கை அணியின் அனுபவ வீரர் மலிங்காவின் மாமியார் காலமானதால், அவர் உடனடியாக நாடு திரும்பினார். இதனால், நடைபெற உள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் போட்டியில் மலிங்கா பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

ICCWORLDCUP2019, MALINGA