'இன்னொருத்தரும் சேந்துட்டார்'.. முதல்வர் முன்னிலையில் அதிமுக-வில் அதிரடியாக இணைந்த பிரபல நடிகர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் ராதாரவி மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவில் இன்று காலை இணைந்துள்ளார்.

'இன்னொருத்தரும் சேந்துட்டார்'.. முதல்வர் முன்னிலையில் அதிமுக-வில் அதிரடியாக இணைந்த பிரபல நடிகர்!

முன்னதாக திமுகவில் இருந்துவந்த ராதாரவி, இன்று காலை தமிழக முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்து மலர்க்கொத்தைக் கொடுத்து அஇஅதிமுகவில் இணைந்துள்ளார்.  ராதாரவி அதிமுகவில் இணைந்தபோது நிகழ்ந்த இந்த சந்திப்பின்போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

சமீபத்தில் நிகழ்ந்த பட விழா ஒன்றில் நடிகை நயன்தாரா பற்றி ராதாரவி பேசிய சர்ச்சைக்கருத்துக்குப் பிறகு, திமுகவில் இருந்து அவர் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் அப்போது ராதாரவி, தான் பேசியதற்கு வருத்தம் தெரிவித்ததோடு, திமுகவில் இருந்து தானே விலகுவதாகவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று காலை இணைந்த பிறகு, இதுபற்றி பேசியுள்ள ராதாரவி, அதிமுகவில், தான் 18 வருடங்கள் இருந்துள்ளதாகவும், ஆனால் திமுகவில் இருந்தது தனக்கு  திருப்தி அளிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார்.