‘இதுனால உலகக்கோப்பைல எதுவேணும் நாலும் மாறலாம்’.. வீரர்களுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது எது தெரியுமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நாளை தொடங்கவுள்ள நிலையில் இங்கிலாந்தின் இந்த சூழல் அனைத்து அணிகளுக்கும், ரசிகர்களுக்கும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (30/05/2019) இங்கிலாந்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், கடந்த 24 ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. இதில், பல போட்டிகள் மழையால் ரத்தானது மற்றும் சில போட்டிகள் தாமதமாக தொடங்கியது.
மேலும், உலகக்கோப்பையில் பங்கேற்கும் அனைத்து அணிகளும் பலமாக உள்ளதால் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பது பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், இந்த தொடரை நடத்தும் இங்கிலாந்து, நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்க அணிகளில் ஒன்றுதான் கோப்பையை வெல்லுமென அதிகம் கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உலகக் கோப்பையில் பங்கேற்க உள்ள அணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருப்பது இங்கிலாந்தில் நிலவும் தட்ப வெட்ப சூழல். மேலும், இங்கிலாந்தில் நிலவும் வானிலை மாற்றம் காரணமாக டாஸ் வெல்லும் அணியின் முடிவே வெற்றியை நிர்ணயிக்கிறது.
இங்கிலாந்து வானிலையை பொறுத்தவரை எப்போது மழை பெய்யும் மற்றும் எப்போது பனி பொழிவு அதிகமாக இருக்கும் என்பதை கணிக்க முடியாத சூழ்நிலையே உருவாகி உள்ளது. மழையின் தாக்கம் அதிகம் இருந்தால் போட்டியில் கணிக்க முடியாத பல திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்தின் வானிலை அனைத்து அணிகளுக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாகவே இருந்து வருகிறது.