பென்ணொருவர் மாயமாக மறைந்துவிட்டதாகவும் அவர் இறைவனிடம் சென்றுவிட்டதாகவும் கூறி, குடும்பத்தினர் கூறியதோடு, தம் வீட்டிலேயே அனைவரையும் கூட்டி பூஜை செய்துவருகின்றனர்.
ராஜஸ்தானின் பார்மர் மாகணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பெண் ஒருவர் மாயமாக மறைந்துவிட்டதாகாக் கூறும் குடும்பத்தினர், அந்த பெண் வாழ்ந்த அந்த வீட்டை மெய் தரிசன மையமாகக் கருதியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த வீட்டுக்கு கிராமத்தினர் பலரும் வருகை தந்து அங்கு தியானம் செய்தும், வழிபட்டும் செல்கின்றனர். ஆனால் இந்தத் தகவலறிந்த அப்பகுதியைச் சேர்ந்த குடமாலினி காவல்துறையினர், அந்த கிராமத்துக்குச் சென்று, காணாமல் போன அந்த பெண்ணைப்பற்றி விசாரிக்கத் தொடங்கிவிட்டனர்.
மேலும் காணாமல் போனதாக வழக்குப்பதிவும் செய்தனர். இதுபற்றி பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் பைரிலால் மீனா, ‘இந்த அறிவியல் யுகத்தில் ஒரு பெண் அப்படி மாயமாக மறைந்திருக்க வாய்ப்பில்லை. காணாமல் போன பெண்ணைப் பற்றிய எந்த புகாரையும் அவரது குடும்பத்தினர் அளிக்க முன்வரவில்லை’ என்று பேசியுள்ளார்.
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ரத்தன்பூர் கிராமத்து பெண்ணான லீலா என்பவரும் இதேபோன்று மாயமாக மறைந்ததாகவும், அவரின் வீட்டிலும் பலர் கூடி தியானங்களையும், சடங்குகளற்ற வழிபாடுகளையும் செய்துவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.