‘உலகக்கோப்பையில் இவரு எப்டி மாஸ் காட்ட போராரு பாருங்க’.. பயிற்சி ஆட்டத்தில் எதிரணியை கதறவிட்ட பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்மித் ஓராண்டு தடைக்கு பின் விளையாடிய முதல் போட்டியிலேயே அதிரடியான கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

‘உலகக்கோப்பையில் இவரு எப்டி மாஸ் காட்ட போராரு பாருங்க’.. பயிற்சி ஆட்டத்தில் எதிரணியை கதறவிட்ட பிரபல வீரர்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடர் வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் இங்கிலாந்து நாட்டில் தொடங்க உள்ளது. இதற்காக பல்வேறு நாடுகள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. அதனால் ஆஸ்திரேய அணி நியூஸிலாந்து அணியுடன் பயிற்சி போட்டியில் விளையாடியது.

பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஓராண்டு தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் மற்றும் வார்னர் தடை முடிவடைந்து விட்டதால் இப்போட்டியில் கலந்து கொண்டனர். மேலும் நியூஸிலாந்து அணி வீரர்களான கேன் வில்லியம்சன், மாட்டின் கப்தில், போல்ட் ஆகியோர் ஐபிஎல் தொடரில் விளையாடி கொண்டிருப்பதால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடவில்லை.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி 46.1 ஓவர்களின் முடிவில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் 33 -வது ஓவரின் போது நியூஸிலாந்தின் டாம் லாதம் அடித்த பந்தை ஸ்மித் ஒற்றை கையில் கேட்ச் பிடித்து அவுட் செய்தார். இந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

ICCWORLDCUP2019, CRICKET, SMITH