பாப்கார்ன் விற்பவர் உருவாக்கிய விமானம்.. விமானப் படை சான்றிதழ் வழங்கி கௌரவம்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

பாகிஸ்தான் நாட்டில், வீட்டிலேயே விமானத்தை உருவாக்கிய பாப்கார்ன் விற்பனையாளருக்கு, அந்நாட்டு விமானப் படை சான்றிதழ் வழங்கி பாராட்டி உள்ளது.

பாப்கார்ன் விற்பவர் உருவாக்கிய விமானம்.. விமானப் படை சான்றிதழ் வழங்கி கௌரவம்!

பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது ஃபயாஸ் என்பவர் பாப்கார்ன் விற்று வருகிறார். சிறு வயதில் இருந்து விமானப் படையில் சேர வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்துள்ளார்.  முகமது ஃபயாஸ் குடும்ப சூழ்நிலை காரணமாக பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தி உள்ளார்.

இதனையடுத்து இவர்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இணையத்தின் உதவியோடும் காற்றின் அழுத்தம், வேகம் ஆகியவற்றை கற்றுக் கொண்டு விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். வீட்டிலிருந்த பொருட்கள் மற்றும் சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு முகமது ஃபயாஸ் விமானத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில் அவரது கண்டுபிடிப்பு குறித்து பாகிஸ்தான் விமானப்படையினர் அடிக்கடி வந்து அவரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அதோடு அவரைப் பாராட்டி சான்றிதழ் ஒன்றையும் பாகிஸ்தான் விமானப்படை அவருக்கு வழங்கி உள்ளது. மேலும், அவரின் கண்டுப்பிடிப்பை அருகில் உள்ள கிராமத்தினர் பலரும் பார்வையிட வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

AIRPLANE, POPCORNSELLER, PAKISTAN