‘என்னய்யா இப்டியெல்லாம் கேட்ச் புடிக்கிறீங்க’.. ‘ஜடேஜாவுக்கே டஃவ் கொடுப்பாரு போல’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் செல்டன் கார்டல் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

‘என்னய்யா இப்டியெல்லாம் கேட்ச் புடிக்கிறீங்க’.. ‘ஜடேஜாவுக்கே டஃவ் கொடுப்பாரு போல’

உலகக்கோப்பை தொடரின் 10 -வது போட்டி நேற்று டிரெண்ட் ப்ரிட்ஜ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 49 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 288 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக நாதன் கூல்டர் நைல் 92 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ஷ்டீவ் ஸ்மித் 73 ரன்கள் எடுத்திருந்தபோது வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒஷானே தாமஸின் அபார கேட்சில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 273 ரன்களை எடுத்து 15 ரன்களில் தோல்வியைத் தழுவியது.

இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் க்றிஸ் கெய்லில் அவுட்டானது சர்ச்சையை கிளப்பியது. ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் க்ரீஸை தாண்டி காலை வைத்து பந்தை வீசினார். இது ஃப்ரீகிட் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அம்பயர் அவுட் கொடுத்தது கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.