'கோயிலுக்கு போனபோது நேர்ந்த விபரீதம்'... 'பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

சாலையில் நின்று கொண்டிருந்த லாரியின் மீது கார் மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'கோயிலுக்கு போனபோது நேர்ந்த விபரீதம்'... 'பேருந்து தீப்பிடித்ததால் பரபரப்பு'!

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ருத்ரவரம் கிராமத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் 10 பேர், திருப்பதி மலைக்கு சாமி கும்பிட காரில் சென்று கொண்டிருந்தனர். இன்று காலை ஆறு மணி அளவில், ரேணிகுண்டா அருகே குருவராஜு பள்ளி கிராமம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியின் பின் பகுதியில் கார் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணித்த 10 பேரில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவலறிந்த ரேனிகுண்டா போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த ஐந்து பேரையும் மீட்டு திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் மூன்று பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஆந்திர மாநில கர்னூல் அருகே தனியார் சொகுசுப் பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட பேருந்து, கர்னூர் மாவட்டம் வழியாக வந்தபோது, திடீரென தீப்பிடிக்க தொடங்கியுள்ளது. உடனடியாக ஓட்டுநர் பேருந்தை நிறுத்தி பயணிகள் அனைவரையும் கீழே இறங்கும் படி தெரிவித்ததால் பயணிகள் உயிர்தப்பினர். பயணிகள் கீழே இறங்கிய சில நிமிடங்களிலேயே பேருந்து முற்றிலும் தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து, தீயணைப்புத்துறை துறையினர் வந்து தீயை அணைத்தனர்

ACCIDENT