‘விக்கெட் முக்கியம்தான் அதுக்காக இப்டியா’.. வைரலாகும் ‘தல’தோனியின் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

க்ருணல் பாண்ட்யாவை தோனி அவுட் செய்ய முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘விக்கெட் முக்கியம்தான் அதுக்காக இப்டியா’.. வைரலாகும் ‘தல’தோனியின் வீடியோ!

ஐபிஎல் டி20 லீக்கின் 12 -வது சீசன் மார்ச் 23 -ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

முன்னதாக சென்னை சேப்பாக்கத்தில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 46 பந்துகளுக்கு 75 ரன்கள் அடித்து தோனி அசத்தினார். அதில் கடைசி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த தோனியின் வீடியோவை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டாடித் தீர்த்தனர். இந்நிலையில் இன்று(03.04.2019) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் ரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதுகிறது.

இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி பேட்டிங் செய்த மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா மற்றும் டி காக் களமிறங்கினர். 20 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 170 ரன்கள் எடுத்தது. அதில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 59 ரன்கள் அடித்து அசத்தினார்.

போட்டியின் நடுவே க்ருணல் பாண்டயா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் போது ஷர்துல் தாஹூர்  வீசிய பந்தை அடித்து ரன்களை எடுத்தார். அப்போது தோனியிக்கு வீசிய பந்தை அவர் விடவே உடனே க்ருணல் பாண்ட்யா ஓவர்த்ரோவில் ரன் எடுக்க ஓடினார். அப்போது தோனி அவரை அவுட் செய்ய முயற்சித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

IPL, IPL2019, CSKVSMI, MSDHONI, WHISTLEPODU, YELLOVEAGAIN, VIRALVIDEO