'உடைச்சது' பூசணிக்கா... செதறுனது 'மொபைலு'.. வைரல் வீடியோ!

முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்
By |

கடந்த திங்கட்கிழமை தமிழ்நாடு முழுவதும் விமரிசையாக ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. அனைவரும் வாகனங்களை கழுவி பொட்டுவைத்து மாலை போட்டு கொண்டாடினர். மேலும் அன்றைய தினம் அனைவரும் பூசணிக்காய்களை உடைத்து திருஷ்டி கழித்தனர்.

'உடைச்சது' பூசணிக்கா... செதறுனது 'மொபைலு'.. வைரல் வீடியோ!

அந்தவகையில் சமூக வலைதளத்தில் ஒருவர் பூசணிக்காய் உடைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் பூசணியை ஓங்கி உடைக்க, அவர் பாக்கெட்டில் இருந்த மொபைல் சட்டென கீழே விழுந்து சிதறுகிறது.

அந்த மொபைலை பிடிக்க அவர், அவரது மனைவி என பலரும் முயற்சி செய்கின்றனர். ஆனாலும் அவர்களின் கைகளில் அகப்படாமல் மொபைல் கீழே விழுந்து உடைகிறது. தற்போது இந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.