‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?’.. ‘தோனியின் தலையில் பலமாக தாக்கிய பந்து’..வைரலாகும் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் வீரர் வீசிய பந்து தோனியின் ஹெல்மெட்டை மோசமாக தாக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் டி20 லீக்கின் 25 -வது போட்டி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நேற்று(11.04.2019) நடைபெற்றது. இப்போட்டியில் ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மற்றும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.
இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து பேட்டிங் செய்ய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களை எடுத்தது. இதனைத் தொடர்ந்து 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய வாட்சனும், டு பிளிஸிஸும் அடுத்தடுத்து அவுட்டாக, அடுத்த வந்த ரெய்னாவும் 4 ரன்களில் எதிர்பாராத ரன் அவுட்டில் வெளியேற, இதனை அடுத்து ஜோடி சேர்ந்த தோனி மற்றும் அம்பட்டி ராயுடுவின் கூட்டணி அதிரடியாக விளையாட ஆரம்பித்தனர். இதில் ராயுடு 57 ரன்களும், தோனி 58 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் 17-வது ஓவரில் ராஜஸ்தான் அணியின் ஆர்செர் வீசிய பந்து தோனியின் ஹெல்மெட்டை பலமாக தாக்கியது. இருப்பினும், அதை பொருட்படுத்தாமல் தோனி ரன் எடுக்க ஓடினார். மேலும் 19-வது ஓவரின் போது தோனி சுவாசிக்க சிரமப்பட்டார். உடனே சென்னை அணியின் உடற்பயிற்சி நிபுணர் மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டார். பரிசோதனைக்கு பின் மீண்டும் தோனி பேட்டிங் செய்ய ஆரம்பித்தார்.
https://t.co/dPrWMgeWWm Dhoni😱
— Thalapathy Love (@Guruselva33) April 12, 2019