'அதெப்படி கேப்டன் உள்ள வர்லாம்?'.. கருத்து சொன்ன பிரபல வீரர்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

ஜெய்ப்பூரில் நடந்த 12-வது ஐபிஎல் டி20 சீசனின் 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் மோதியபோது உருவானது நோ-பால் சர்ச்சை.

'அதெப்படி கேப்டன் உள்ள வர்லாம்?'.. கருத்து சொன்ன பிரபல வீரர்!

ஆட்ட தொடக்கத்தில் முதலில் பேட் செய்த  ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு, 20 ஓவர்களில் 151 ரன்களை எடுத்திருந்தது. அதன் பின்னர் 152 என்கிற இலக்குடன் இறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆனால் முன்னதாக கடைசி ஓவரில் சான்ட்னர் எதிர்கொண்ட பந்து பேட்ஸ்மேனின் தோள்பட்டைக்கு மேல் சென்றதால், லெக் அம்பயர் , நோ-பால் கொடுத்தார். எனினும் இந்த நோ-பாலை ஸ்டிரைட் அம்பயர் ரத்து செய்தார். இந்த குழப்பங்களுக்கு இடையில் ஒரு முடிவு எடுத்து இறுதியாக நோபால் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கிரவுண்டுக்கு வெளியே அமர்ந்திருந்த தோனி, இதனைக் கண்டதும் இறங்கி வந்து ஏன் நோ-பாலை ரத்து செய்தீர்கள்  என்று ஆக்ரோஷமாக கேட்டு வாதம் செய்யத் தொடங்க, பென் ஸ்டோக்ஸுக்கும் தோனிக்கும் இடையில் வாக்குவாதம் சூடாகி, நோபால் தராத நடுவர்களின் மீதான கோபத்துடன் தோனி வெளியேறினார். இதனால் அவருக்கு ஐபிஎல் 50% அன்றைய போட்டி சம்பளத்தை அபராதமாக விதித்தது.

இதுகுறித்து பேசியுள்ள ஜோஸ் பட்லர், சென்னை அணியின் கேப்டன் தோனி தனது ஆட்டம் முடிந்த பிறகு மைதானத்திற்குள் இறங்கியது சரியா இல்லையா என்பதெல்லாம் தனக்கு உறுதியாக தெரியவில்லை என்றும், ஆனால் ஐபிஎல் கிரிக்கெட்டின் ஒவ்வொரு போட்டியிலும் டென்ஷன் அதிகரிப்பதால் ஒவ்வொரு ரன்னும் முக்கியம் என்பதில் தனக்கு எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை என்றும் கூறினார். ‌

மேலும் இந்த நோ-பால் சர்ச்சை என்பது ஆட்டத்தில் முக்கியமான தருணமாக இருப்பதால் இது போன்ற சமயத்தில் அணியின் கேப்டன் களத்திற்குள் புகுவது என்பது சரியில்லை என்று, தான் கருதுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து நடுவர்கள் பேசி ஒரு முடிவு அடைந்துள்ளனர், எனினும் சர்ச்சைக்குரிய இந்த சம்பவம் பற்றி தனக்கு முழுமையாக தெரியாததற்குக் காரணம், தான் எல்லைக்கோட்டுக்கு அருகே இருந்ததுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

IPL, IPL2019, MSDHONI, NOBALLCONTROVERSY, JOSBUTTLER