'இது தான் உலகக்கோப்பைக்கான பட்டியல்'...'பிரபல வீரரின் சாய்ஸ்'...அவரை ஏன் எடுக்கல?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இந்த வீரர்கள் தான் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என,ஒரு பட்டியலை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'இது தான் உலகக்கோப்பைக்கான பட்டியல்'...'பிரபல வீரரின் சாய்ஸ்'...அவரை ஏன் எடுக்கல?

மும்பையில் இன்று நடைபெறும் தேர்வுக் குழு‌ உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் இந்திய அணி அறிவிக்கப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில், இந்திய கேப்டன் விராட் கோலி ‌மற்றும் இந்திய அணியின் பயிற்சியாளர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக், தான் தேர்வு செய்தால் இது தான் தனது அணி என்று ஒரு பட்டியலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 2015ம் ஆண்டு உலகக்கோப்பையில் விளையாடிய 7 பேரை மறுபடியும் தேர்வு செய்துள்ளார்.

இதனிடையே புதிதாக கேதர் ஜாதவ், கேஎல் ராகுல், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ்,ஜாகல் ஆகியோரை தேர்வு செய்துள்ளார். இந்நிலையில் ரெய்னா, தினேஷ் கார்த்திக்கை ஏன் தேர்வு செய்யவில்லை எனவும்,அவர்கள் இருவரும் அணிக்கு வேண்டும் எனவும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.