'திரும்பத் திரும்ப அதையே சொல்ற?'.. பெண்ணை கொன்று பார்சல் செய்து வீசிய காதலன்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

ஹைதராபாத்தில் காதலனால் கொடூரமாகக் கொல்லப்பட்டு சூட்கேஸீல் அடைக்கப்பட்டு வாய்க்காலில் வீசப்பட்ட பெண்ணின் சடலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

'திரும்பத் திரும்ப அதையே சொல்ற?'.. பெண்ணை கொன்று பார்சல் செய்து வீசிய காதலன்!

தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்துவந்த 25 வயதான லாவன்யா, பீகாரைச் சேர்ந்த சுனில் குமாரை காதலித்து வந்தார். இவர்களின் காதலுக்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்த நிலையில், திருமண பேச்சை சுனில்குமார் கவனமாக தவிர்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் லாவன்யாவின் பெற்றோரின் சம்மதத்துடன் வெளிநாட்டு இண்டர்வியூவுக்கு அழைத்துச் சென்றவர் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

இவ்வழக்கை விசாரித்த போலீஸார், சுனில் லாவன்யாவை மஸ்கட்டுக்கு அழைத்துச் செல்லாமல், விமான நிலைய அறையில் தங்கவைத்துள்ளதையும் அங்கு திருமணம் சம்மந்தமாக உண்டான வாக்குவாதத்தின் காரணமாக லாவன்யாவைக் கொன்று சூட்கேஸில் வைத்து வீசியுள்ளதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர்.

காதலித்த தன் காதலனை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதற்காக கணவரால், பெண் ஒருவர் கொல்லப்பட்டு வீசப்பட்ட இந்த வழக்கு போலீஸாரையே பதைபதைக்க வைத்ததோடு, போலீஸாரின் விசாரணையில் கணவர் சுனில் தன் மனைவியை கொன்று எங்கு வீசினார் என்பதை வாக்குமூலமாக கூறியதை அடுத்து போலீஸார் லாவண்யாவின் சடலத்தைக் கண்டுபிடித்தனர்.

CRIME, MURDER, MARRIAGE, LOVE