'அரைசதம் எடுத்தாலும் மறைமுகமாக'... 'தோனியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக இத்தனை தற்காப்பா என இந்திய அணி வீரர்களை முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார்.

'அரைசதம் எடுத்தாலும் மறைமுகமாக'... 'தோனியை விமர்சித்த முன்னாள் இந்திய வீரர்'!

உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஓல்டு ட்ராஃபோர்டில் நடைப்பெற்ற போட்டியில், இந்தியா 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.  தற்போதைய தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு எதிரானப் போட்டிகளில், இந்திய அணி சுழற்பந்துவீச்சை எதிர்த்து விளையாட முடியாமல் தடுமாறுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆப்கானிஸ்தான் போட்டியின்போது மிடில் ஆர்டரை குறிப்பாக தோனியை, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் விமர்சித்திருந்தார். தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் விமர்சித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ரஷித் கான், முதல் 4 ஓவர்களில் 25 ரன்களை விட்டுக் கொடுத்தார். அடுத்த 6 ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பின்னர் ஆலன், முதல் 5 ஓவர்களில் 34 ரன்கள் கொடுத்தார். ஆனால், கடைசி ஓவர்களில் 18 ரன்கள் மட்டுமே கொடுத்தார். சுழற்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் இத்தனை தற்காப்பா?’ என பதிவிட்டு இந்திய அணியை விமர்சித்துள்ளார். சேவாக் கூறிய இரண்டு ஸ்பின்னர்களின் ஓவர்களையும், பின்னால் எதிர்கொண்டது தோனிதான். இதனால் அவர் தோனியை தான் மறைமுகமாக விமர்சிக்கிறார் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.