ட்விட்டரில் பதிவிட்ட ஃபோட்டோவால்.. ‘மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விராட் கோலி..’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி அடுத்ததாக 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்திய அணி உலகக் கோப்பை அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியதைத் தொடர்ந்து கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகிய இருவர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன்காரணமாக குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு இனி ரோஹித் ஷர்மா கேப்டனாக நியமிக்கப்படலாம் எனவும் கூறப்பட்டது. ஆனால் அடுத்து விளையாடவுள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் தற்போது விராட் கோலியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தொடருக்கு முன் செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி ரோஹித் ஷர்மாவிற்கும் தனக்கும் இடையே கருத்துவேறுபாடு என்ற செய்தியை முற்றிலுமாக மறுத்திருந்தார்.
இந்நிலையில் விராட் கோலி ட்விட்டரில் ‘ஸ்குவாட்’ (அணி) என ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்திய அணி வீரர்களுடன் விராட் கோலி இருக்கும் அந்த புகைப்படமே தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அணி என அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா எங்கே என ரசிகர்கள் ட்விட்டரில் கேள்வி எழுப்பி வருகின்றனர். உங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லையென்றால் ஏன் எப்போதும் நீங்கள் பதிவிடும் புகைப்படத்தில் ரோஹித் ஷர்மா இருப்பதில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னதாக விராட் கோலி பதிவிட்டிருந்த புகைப்படத்திலும் ரோஹித் ஷர்மா மட்டும் இல்லாதது இங்கு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே ரோஹித் ஷர்மா தனது ட்விட்டரில், “நான் விளையாடுவது எனது அணிக்காக மட்டுமல்ல. நான் விளையாடுவது என்னுடைய நாட்டிற்காக” எனப் பதிவிட்டுள்ளார். அடுத்தடுத்த இந்த நிகழ்வுகள் இந்திய அணி குறித்த ரசிகர்களின் சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது.
Where is Rohit Sharma
— Arjun Srivastava (@ArjunSr34875084) August 2, 2019
Oye pic.twitter.com/Jooha2HMfz
— Chota Don (@choga_don) August 2, 2019
Hey @imVkohli if everything is alright with in your team and dressing room, why every time you post a pic with team members @ImRo45 always go missing?? #RohitSharma #ViratKohli
— Gaurav Varmani 🇮🇳 (@gauravvarmani) August 2, 2019
Modern & Dashing Squad 💯✔ pic.twitter.com/y2oTZ6a02d
— Manoranjan Singh (@king_manoranjan) August 2, 2019
Miami bound 😎💪🇮🇳 pic.twitter.com/ywIh0ePTuZ
— Virat Kohli (@imVkohli) July 29, 2019