'தல தோனியை விட சரியாக கணித்த விராட் கோலி'... 'முதல்முறையாக தவறு செய்த தோனி?'
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் கணிப்பை விட, விராட் கோலியின் கணிப்பு சரியாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் கடந்த 16-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. மழைக்கு நடுவே பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டி இறுதிவரை விறுவிறுப்பாக சென்றது. இந்திய அணி டக் வொர்த் லீவிஸ் முறையில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.
இந்நிலையில் எப்பொழுதும் டிஆர்எஸில் கலக்கும் தோனி, பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் முதல்முறையாக தவறு செய்ததாக, ரசிகர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். போட்டியின்போது, சாஹல் வீசிய 19-வது ஓவரின் ஐந்தாவது பந்தில், பாபர் ஆசம் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனதாக சாஹல் உறுதிப்பட நம்பினார். கேப்டன் கோலி, சாஹல் இருவரும் மிகவும் உறுதியோடு இருந்தனர்.
இதனையடுத்து கேப்டன் விராட் கோலி ரிவ்யூ கேட்கலாமா என்று தோனியிடம் கேட்க, பந்து முதலில் பேட்டில்தான் பட்டது என்று அவர் கூறினார். இதனால், ரிவ்யூ எடுக்கப்படவில்லை. அப்போது பாபர் ஆசம் 34 ரன்கள் எடுத்திருந்தார். ஆனால், ரீப்ளேவில் பந்து பேடில்தான் முதலில் பட்டது என தெரியவந்தது. அப்போது பாபர் ஆசம் அவுட் என தெரியவந்தது. பின்னர், குல்தீப் பந்தில் பாபர் ஆசம் 48 ரன்களில் அவுட்டானார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
The fact that Dhoni couldn't read the possible leg before wicket of Babar Azam right goes to show that in spite of his being the genius that he is, he can make mistakes.#IndiaVsPakistan #INDvPAK #CWC19 #PAKvIND
— Uzair Salman (@uzzzair1) June 16, 2019
Babar was out
Kohli was Right
Dhoni was Wrong
Will cost a game??@cricketaakash #IndiaVsPakistan
— Atamjeet sidhu (@Sidhu_Atam) June 16, 2019
Wrong call by #MSDhoni in taking DRS and #Kohli obliged not to take review which was out! It might become costly for #India in later stages! #IndvPak #CWC19
— NISHANT TYAGI (@topchibaba) June 16, 2019