‘50 போன்கால்’.. ‘எல்லாரும் ஒரே கேள்விதான் கேட்டாங்க’.. ‘என் வாழ்க்கையே மாறிடுச்சு’.. விஜய் சங்கர் உருக்கம்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் இளம் வீரரான விஜய் சங்கர் நிதாஹஸ் டிராபியின் போது நடந்த சம்பவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

‘50 போன்கால்’.. ‘எல்லாரும் ஒரே கேள்விதான் கேட்டாங்க’.. ‘என் வாழ்க்கையே மாறிடுச்சு’.. விஜய் சங்கர் உருக்கம்!

ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பைத் தொடரில் இந்திய அணியில் இரண்டு தமிழக வீரர்களுக்கு இடம் கிடைத்துள்ளது. ஒருவர் நட்சத்திர வீரரான தினேஷ் கார்த்திக் மற்றொருவர் இளம் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர். இவர் கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் டிராபின் போது மிகவும் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளார்.

அப்போட்டிக்கு பிறகு சந்திந்த விமர்சனங்கள் குறித்து விஜய் சங்கர் மனம் திறந்துள்ளார். அவர் கூறியதாவது,‘என்னோட வாழ்க்கையை மாற்றிய சம்பவம் நிதாஹஸ் டிராபிதான். இது நடந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. ஆனால் அப்போது அது எவ்வளது கடினமாக இருந்தது என எனக்குதான் தெரியும். போட்டி நடந்த அன்றைய நாள் மட்டும் நான் சுமார் 50 மீடியா நபர்களின் போன்கால் பேசியிருப்பேன். அவர்கள் அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள். அதையேதான் சமூக வலைதளங்களிலும் பேசிகொண்டார்கள். கடினமாக இருந்தது. இந்த சம்பவத்தில் இருந்து வெளியேற நினைத்தேன். இந்த சம்பவங்கள் அனைத்தும் கடினமான சூழ்நிலைகளை எப்படி கையாள வேண்டும் என கற்று கொடுத்தது’ என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,‘அந்த போட்டியில் என்னுடைய பேட்டிங் விமர்சிக்கப்பட்டது. ஆனால் அந்த தொடரின் நான் பௌலிங்கும் செய்திருந்தேன். அன்றைய சம்பவங்கள் அனைத்தும் எனக்கு பாடமாக அமைந்தது. இதன் பின்னர் தோனி, கோலி, ரோஹித் போன்ற வீரர்களிடம் இருந்து மோசமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என கற்றுக்கொள்ள நினைத்தேன். அதனால் இவர்களது ஆட்டத்தை எப்போது கவணித்துக் கொண்டே இருக்கிறேன்’ என ஹிந்துஸ்தான் டைம்ஸ்க்கு அளித்த பேட்டியில் விஜய் சங்கர் பேசியுள்ளார்.

ICCWORLDCUP2019, TEAMINDIA, VIJAYSHANKAR