“தேர்தல் முடிவுக்கு முன்னாடியே எம்.பி ஆன ஓபிஎஸ் மகன்”!.. ‘எதிர்ப்பு கிளம்பியதால் கல்வெட்டில் இருந்து பெயர் நீக்கம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மக்களவைத்தேர்தலின் வாக்குப்பதிவு நிறைவடையாத நிலையில் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டுள்ள ரவீந்திரநாத் குமாரின் பெயரில் நாடாளுமன்ற உறுப்பினர் என கல்வெட்டு பதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் என்ற கிராமத்தில் சனீஸ்வரர் பகவான் கோயில் உள்ளது. இக்கோயில் அருகே தனிநபர்களுக்கு சொந்தமான காசி ஸ்ரீ அன்னபூரணி கோயில் உள்ளது. கோயில் நிர்வாகத்தினர் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் உறவினர் என்பதால் கோயிலுக்கு நிதியுதவி வழங்கியதாக பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் குமாரின் பெயர்களை, அங்குள்ள கல்வெட்டில் பதிந்துள்ளனர்.
இதில் ரவீந்திரநாத் குமாரின் பெயர் முன்பு, தேனி நாடாளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்டுள்ளதால், பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்நிலையில், இச்சம்பவம் குறித்து விசாரித்தபோது, ``கோயில் நிர்வாகத்துக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. அதில் தேதி 16.5.2019 எனக் குறிப்பிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை வரும் 23-ம் தேதி நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாகவே துணைமுதல்வரின் மகன் ரவீந்திரநாத்குமாரை எம்.பி என அறிவிக்கும் விதமாக கல்வெட்டு பொறிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து அவரது பெயர் அந்த கல்வெட்டில் மறைக்கப்பட்டுள்ளது.