'CSK' கேப்டன் ஆனதுக்கு அப்புறம் 'தல' ஆனாரா தோனி? 'அப்டின்னா’ அதுக்குக் காரணம் இவர்தான்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், கிரிக்கெட் கமெண்ட்ரி பேச்சாளருமான வி.பி.சந்திரசேகர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது இல்லத்தில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 57. அவரது இறப்பு கிரிக்கெட் உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அவரைப் பற்றிய நினைவலைகளை கிரிக்கெட் வீரர்கள் பலரும் பகிர்ந்துகொண்டு வருகின்றனர்.
1988 முதல் 1990-ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக 7 ஒருநாள் போட்டிகளுக்காக ஆடிய வி.பி.சந்திரசேகர் இந்திய அணியின் சார்பாக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பெரிதாக விளையாடவில்லை என்றாலும், இன்று இந்திய ரசிகர்கள் வரையில் தோனி என்றால் தல என்கிற அடைமொழி உருவாவதற்குக் காரணமாக இருந்த ஐபிஎல் தொடரின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனியை தேர்ந்தெடுத்தவரே இவர்தான்.
முன்னதாக ஹைதராபாத்தில் தோனியை சந்தித்த முதல் தருணத்தை ஒரு இதழில் பேட்டியாக அளித்தபோது, ‘பார்த்த முதல் தருணத்திலேயே நீங்கள் என் சிந்தனையை ஆக்கிரமித்துவிட்டீர்கள். நாங்கள் உங்களை சென்னை சூப்பர் கிங்ஸ்க்காக தேர்வு செய்ய விரும்புகிறோம்’ என்று கூறியதாகக் குறிப்பிட்டார் வி.பி.
விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஒரு கேப்டன் கிடைப்பது அரிது, அத்தகைய 3-ம் கலந்த ஒற்றை சொத்துதான் தோனி என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.