இந்திய அணி தலைமை பயிற்சியாளர்’... ‘இந்த 6 பேரில் ஒருத்தர்தான்’... ‘வெளியான புதிய தகவல்’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட மற்ற பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்திய அணி தலைமை பயிற்சியாளர்’... ‘இந்த 6 பேரில் ஒருத்தர்தான்’... ‘வெளியான புதிய தகவல்’!

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் உள்பட அனைத்து வகையான பயிற்சியாளர் பதவியும், உலகக் கோப்பை தொடரோடு, முடிவடைந்தது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரின் காரணமாக, அனைவரது பதவிக்காலமும் 45 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. இந்தப் பதவிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த ஜூலை 30-ம் தேதி வரை இந்திய பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன.

இந்த விண்ணப்பங்களை, முன்னாள் கேப்டன் கபில்தேவ் தலைமையிலான 3 பேர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி,  பரிசீலித்தது. இறுதியாக இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு, 6 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, நியூசிலாந்து அணியின் மைக் ஹெசன், ஆஸ்திரேலிய அணியின் டாம் மூடி, மேற்கிந்திய அணியின் பில் சிம்மன்ஸ், இந்திய அணியின் லால்சந்த் ராஜ்புத், ராபின்சிங் மற்றும் ரவி சாஸ்திரி உள்ளிட்ட 6 பேர் தேர்வு செய்யப்பட்டு, நேர்காணல் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இவர்களில் ரவிசாஸ்திரி, டாம் மூடி, பில் சிம்மன்ஸ் ஆகியோரிடம்  வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்படுகிறது. இதையடுத்து இன்று இரவு 7 மணிக்கு மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் தலைமைப் பயிற்சியாளர் யார் என்பது அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இதர துணை பயிற்சியார் பணியிடங்களை, சீனியர் தேர்வுக் குழுத் தலைவர் பிரசாத் தலைமையிலான குழு தேர்வு செய்கிறது. இந்நிலையில், ரவிசாஸ்திரியே தலைமை பயிற்சியாளராக தொடர வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

HEADCOACH, MUMBAI, KAPILDEV, RAVISHASTRI