'வேகமாக வந்த 'ஷார்ட் பிட்ச்' பால்'...'இளம் வீரருக்கு நேர்ந்த சோகம்'... அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஷார்ட் பிட்ச் பந்து கழுத்தை தாக்கியதில் இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசு சார்பில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் அந்த மாநிலத்தின் பட்டான் பகுதியை சேர்ந்த இளம் வீரர் ஜஹாங்கிர் அகமது பங்கேற்று விளையாடினார். அவர் பேட்டிங் செய்துகொண்டிருந்த போது, வேகமாக வந்த பந்து அவரது கழுத்தை தாக்கியது. இதில் நிலைகுலைந்த அவர் மைதானத்திலேயே சரிந்து விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக வீரர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார்கள். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
இதனிடையே வேகமாக வந்த ஷார்ட் பிட்ச் பந்தை ஜஹாங்கிர் அடிக்க முற்பட, அது நழுவி அவரது கழுத்தைத் தாக்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தும் பந்து வேகமாக தாக்கியதால் ஜஹாங்கிர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் அங்கிருந்த சக வீரர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.