‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பேரிழப்பு’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற முக்கிய நபர்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் பிசியோ பேட்ரிக் ஃப்ர்ஹாட் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

‘இந்திய அணிக்கு மீண்டும் ஒரு பேரிழப்பு’.. உருக்கமான பதிவுடன் விடைபெற்ற முக்கிய நபர்..!

நடந்து முடிந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டியில் நியூஸிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இந்திய அணி இழந்தது. இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்திய அணியின் பிசியோ பேட்ரிக் ஃபர்ஹாட் ஓய்வு குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘இந்திய அணியுடனான எனது கடைசி நாள் நான் விரும்பியபடி நடக்கவில்லை. இருந்தாலும் கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு அளித்த பிசிசிஐக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலம் சிறப்பாக அமைய இந்திய அணி வீரர்கள் மற்றும் ஊழியர்களுக்கு எனது வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். மேலும் மற்றொரு துணை ஊழியரான சங்கர் பாசு என்பவரும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில்,‘அணிக்கு அற்புதமாக உழைத்த பேட்ரிக் மற்றும் பாசுவுக்கு நன்றி. நீங்கள் இருவரும் எங்களுடன் வைத்திருக்கும் நட்பு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நீங்கள் இருவரும் உண்மையான ஜென்டில்மேன். உங்களது வாழ்க்கையின் அடுத்த கட்டம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்’ என அவர் பதிவிட்டுள்ளார்.

BCCI, VIRATKOHLI, TEAMINDIA, PATRICK FARHART