BGM Shortfilms 2019

‘அவரு எப்படி, அப்டி பேசலாம்’... ‘கடுப்பான பிசிசிஐ’... ‘நடவடிக்கை எடுக்க முடிவு’!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக உள்ள சுனில் சுப்பிரமணியம், தூதரக அதிகாரிகளிடம் முறையற்ற வகையில் நடந்துகொண்டதால், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘அவரு எப்படி, அப்டி பேசலாம்’... ‘கடுப்பான பிசிசிஐ’... ‘நடவடிக்கை எடுக்க முடிவு’!

இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாக மேலாளராக இருப்பவர் சுனில் சுப்பிரமணியம். கடந்த 2017-ம் ஆண்டு முதல் இப்பொறுப்பில் இருக்கும் இவரது பதவிக்காலம் உள்பட, பயிற்சியாளர்கள் மற்றும் பிற பணியாளர்களின் பதவிக் காலம் உலகக் கோப்பை தொடருடன்  முடிந்தது. எனினும், அடுத்தக் கட்ட தேர்வு நடைபெற கால அவகாசம் வேண்டும் என்பதால், மேற்கிந்திய தீவுகள் தொடர் வரை, அனைவரும் பணியில் இருக்கும் வகையில், 45 நாட்கள் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் புதிய சர்ச்சையில் மேலாளர் சுனில் சுப்ரமணியம் சிக்கியுள்ளார்.

தண்ணீர் சேமிப்பு தொடர்பாக மத்திய அரசு விழிப்புணர்வு விளம்பரங்களை எடுத்துவருகிறது. இதில், கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இதில் நடிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேற்கிந்திய தீவுகளில் இந்திய அணி இருப்பதால், அங்குள்ள இந்திய தூதரக உயர் அதிகாரிகள், இதற்காக அணியின் மேலாளரான சுனிலை அணுகியுள்ளனர். ஆனால், சுனில் தூதரக அதிகாரிகளிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொண்டுள்ளதாகவும், ‘என்னை மெசேஜ் வெள்ளத்தில் மூழ்கடிக்காதீர்கள்’ என எரிச்சலில் பேசியதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், இந்த விவகாரத்தை மத்திய அரசிடம் கொண்டு சென்றுள்ளனர். மத்திய அரசு சுனில் மீது நடவடிக்கை எடுக்க பிசிசிஐக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. சுனில் விவகாரம் தொடர்பாக பிசிசிஐ தலைமை செயல் அதிகாரி ராகுல் ஹோஹ்ரி விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கிந்தித்தீவுகளில் இருக்கும் சுனில், தற்போது பாதியிலேயே திரும்ப இந்தியாவுக்கு அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான சுனில் சுப்பிரமணியம், முன்னணி வீரரான ரவிச்சந்திரன் அஸ்வினின் தனிப்பட்ட பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். ரவி சாஸ்திரி மீண்டும் தலைமை பயிற்சியாளர் பதவியில் அமர்வார் என கூறப்படும் நிலையில், அவருக்கு வேண்டிய சுனில் சுப்ரமணியம் நிச்சயம் பணியை தக்க வைத்துக் கொள்வார் என கூறப்பட்டது. தற்போது இந்த சிக்கலால், அவர் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவரா என்பது தெரியவில்லை.

BCCI, SUNILSUBRAMANIAM, INDIA, TEAMINDIA