‘கயிறு கட்டி டைவ் அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள்’.. ‘கொஞ்சம் மிஸ் ஆனா என்ன ஆகுறது’.. வைரலாகும் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஜாலியாக நீரில் குதித்து விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதனைத் தொடர்ந்து 3 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டி மழையால் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
இந்நிலையில் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று க்யூன்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிக்கு முன்னதாக ரோஹித் ஷர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பொல்லார்ட் உள்ளிட்ட வீரர்கள் கரீபியனில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்துள்ளனர். இதில் ஷிகர் தவான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் கயிறு மூலம் நீரில் குதித்து விளையாடும் வீடியோவை தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.