'காட்டுப்பய சார் இந்த ஆளு.. திரும்பி வந்தாலும் வந்தாரு'.. கோலியை பின்னுக்குத் தள்ளி 'புதிய சாதனை'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் ஆஷஸ் டெஸ்ட் தொடர் ஆட்டம் பிர்மிங்ஹாமில் இன்று தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தாலும், இங்கிலாந்தின் சரமாரி பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் தத்தளித்தது.

'காட்டுப்பய சார் இந்த ஆளு.. திரும்பி வந்தாலும் வந்தாரு'.. கோலியை பின்னுக்குத் தள்ளி 'புதிய சாதனை'!

2 ரன்கள் எடுத்து வார்னரும், 8 ரன்கள் எடுத்து பான்கிராஃப்ட்டும், 13 ரன்களில் கவாஜாவும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன்  அமைத்த பார்ட்னர்ஷிப்பும் நிலைக்கவில்லை. 122 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தவித்தது. அப்போதுதான் பீட்டர் சிடில்,  ஸ்டீவ் ஸ்மித்துடன் நிலையான பார்ட்னர்ஷிப்பை கடைசி நேரத்தில் கட்டமைத்தார்.

அதன்பின், இந்த இணை அபாரமாக விளையாடியது. ஆனால் 44 ரன்களில், பீட்டர் ஆட்டமிழக்கும்போது, ஸ்மித்  85 ரன்களை அடித்திருந்தார்.  ஆனாலும் அத்ன பின் களமிறங்கிய லயனின் ஒத்துழைப்புடன் பவுண்டரிகளை விளாசிய ஸ்மித், அணியின் ஸ்கோரை 270 வரை கொண்டு சென்றதோடு,  தனது 24-வது சதத்தை வெற்றிகரமாக எட்டியதோடு, மேற்கொண்டு விளையாடினார்.

150 எடுப்பதே அரிதாக இருந்த ஆஸ்திரேலிய அணி இந்த அளவுக்கு ஸ்கோரை எட்டியதற்கு காரணமாக இருந்த ஸ்மித், சில காலம் தடையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது உலக டெஸ்ட் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 24 சதமடித்து, இந்த பட்டியலில் 2வது இடத்தில் இருந்த கோலியை பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறார் ஸ்மித்.

இதனால், 66 இன்னிங்ஸில் 24-வது சதத்தை அடித்து, டான் பிராட்மேன் முதல் இடத்திலும், 118 இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டிய ஸ்மித் 2-வது இடத்திலும், 123 இன்னிங்ஸில் 24-வது சதத்தை எட்டிய கோலி 3-வது இடத்திலும் உள்ளனர்.

CRICKET, TEST, AUSVENG, ASHES19