VIDEO: ‘2020-ம் வருஷத்த இப்டி ஆரம்பிங்க’!.. ‘மனச உருக வச்சுருச்சி’.. சச்சின் வெளியிட்ட ‘இன்ஸ்பிரேஷனல்’ வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுபூர்வமான வீடியோவை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளார்.

VIDEO: ‘2020-ம் வருஷத்த இப்டி ஆரம்பிங்க’!.. ‘மனச உருக வச்சுருச்சி’.. சச்சின் வெளியிட்ட ‘இன்ஸ்பிரேஷனல்’ வீடியோ..!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று 7 ஆண்டுகள் ஆகின்றன. இதனிடையே ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் சார்பாக விளையாடினார். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் அதன் மீதான ஆர்வம் அவருக்கு சற்றும் குறையவே இல்லை என்றே கூறலாம். அதற்கு உதாரணமாக அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார்.

அதில் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி சிறுவன் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், இந்த குழந்தை மடா ராம் தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் உத்வேகம் தரும் வீடியோவுடன் 2020-ம் ஆண்டை தொடங்குகள். இது என் மனதை உருக்கியது, உங்களுக்கும் அவ்வாறு இருக்கும் என நம்புகிறேன் என பதிவிட்டுள்ளார்.

CRICKET, SACHINTENDULKAR, NEWYEAR2020