‘இது எனக்கும் நடக்குது.. அந்த பெண்ணிடம் அப்படி நடந்துகிட்டது தப்புதான்!’.. மன்னிப்பு கேட்ட போப் ஆண்டவர்!

முகப்பு > செய்திகள் > உலகம்
By |

உலகம் முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டிய நிலையில், கத்தோலிக்க மதத் தலைவரான போப் ஃபிரான்சிஸ், வாட்டிகன் செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த பிரார்த்தனை கூட்டத்தில் கலந்துகொண்டார்.

‘இது எனக்கும் நடக்குது.. அந்த பெண்ணிடம் அப்படி நடந்துகிட்டது தப்புதான்!’.. மன்னிப்பு கேட்ட போப் ஆண்டவர்!

பிரார்த்தனை முடிந்ததும், போப் ஆண்டவர் மக்களை நோக்கி வாழ்த்துச் சொன்னபடி வலம் வந்தார். குழந்தைகளுக்கு கைகொடுத்தபடி நடந்து வந்த போப்பின் கைகளை ஒரு பெண் இறுகப் பற்றிக்கொண்டு ஏதோ சொல்ல வந்தார். ஆனாலும் போப் கைகளை விட நினைத்தும், அப்பெண் கைகளை விடாததால், நிலைகுலைந்த போப் கோபமாக அந்த பெண்ணின் கைகளை தட்டிவிட்டார்.

இந்த வீடியோ

கிடுகிடுவென இணையதளத்தில் பரவியது. அதற்கு முன்னர்தான் போப் ஆற்றிய தனது உரையில் ‘கடவுளே ஒரு பெண்ணிடம் இருந்துதான் பிறந்தார். அவருக்கு எதிரான அவதூறுதான், பெண்களுக்கு எதிராக நிகழும் ஒவ்வொரு வன்முறையும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த உரை ஆற்றிய சிறிது நேரத்திலேயே போப் இப்படி நடந்துகொண்டதை பலரும் விமர்சனம் செய்ததை அடுத்து, போப் ஃபிரான்சிஸ் மன்னிப்பு கேட்டுள்ளார். அதன்படி,‘நாம் அனைவருமே பல சமயங்களில் பொறுமையை கைவிட நேரிடுகிறது. துரதிர்ஷ்டவசமாக இது எனக்குமே நடக்கிறது. தற்போது நடந்த இந்த மோசமான செயலுக்காக நான் மன்னிப்பு கோருகிறேன்’ என்று போப் பேசியுள்ளார்.

POPEFRANCIS, NEWYEAR2020