‘விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அடித்த ஜாக்பாட்’.. வெளியான புதிய அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்தியா ஏ அணியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

‘விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்டிற்கு அடித்த ஜாக்பாட்’.. வெளியான புதிய அறிவிப்பு!

இங்கிலாந்து நாட்டில் வரும் மே மாதம் 30 -ம் தேதி முதல் ஒருநாள் போட்டிக்கான உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இதற்கான இந்திய வீரர்களின் பட்டியலில் இளம் வீரர் ரிஷப் பண்ட் மற்றும் அம்பட்டி ராயுடு போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

மேலும் இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். ரிஷப் பண்ட் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடஸ் சார்பாக சிறப்பாக விளையாடினார். மேலும் டெல்லி அணியின் பயிற்சியாளரும் , இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான கங்குலி, ரிஷப் பண்ட்டின் தேவை உலகக்கோப்பையில் இந்திய அணி மிஸ் பண்ணும் என தனது கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி மற்றும் இந்தியா ஏ அணிக்கு இடையேயான ஒருநாள் போட்டிகளில் விளையாட ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் சாகா, மனிஷ் பாண்டே போன்ற வீரர்களுக்கும் இடம் பிடித்துள்ளனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணியின் வீரர்கள் விபரம் :

மனிஷ் பாண்டே (கே), பிருத்வி ஷா, மாயன்க் அகர்வால், சுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமன் விகாரி, ரிஷப் பண்ட் (வி.கீ), ராகுல் சாஹார், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் பட்டேல், கிருஷ்ண பாண்டியா, தீபக் சஹார், நவாதிப் சைனி, கலீல் அகமது, அவேஷ் கான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் மற்றும் 2 -ம் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி  ஏ அணியின் வீரர்கள் விபரம் :

ஷ்ரேயாஸ் ஐயர்(கே), பி.கே. பஞ்சால், ஏ.ஆர் ஈஸ்வரன், சுப்மன் கில்,  ஹனுமன் விகாரி, ஷிம்ம் டூப், விருத்திமன் சஹா, கே.எஸ். பாரத் (வி.கீ), கே கௌதம், எஸ்.நாதெம், மாயன்க் மார்கண்டே, நவாதிப் சைனி, முகம்மது சிராஜ், ஷர்துல் தாகூர், அவேஷ் கான்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3-நாள் போட்டிகளுக்கான இந்திய ஏ அணியின் வீரர்கள் விபரம்  :

ஷ்ரேயாஸ் ஐயர்(கே), பிருத்வி ஷா, மாயன்க் அகர்வால், ஹனுமன் விகாரி, சுப்மன் கில், விருத்திமான் சஹா (வி.கீ.), கே.எஸ். பாரத், ஷிம்மன் டூப், மயங்க் மார்கண்டே, கே. கௌதம், எஸ். நதீம், நவாதிப் சைனி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், அவேஷ் கான்

ICC, RISHABHPANT, TEAMINDIA, BCCI