'இந்த நிற ஜெர்சிதான் பெருமை - விராட் கோலி' ... 'கிண்டலடித்த ரசிகர்கள்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இந்திய அணியின் ஆரஞ்சு நிற ஜெர்சியை அறிமுகம் செய்த விராட் கோலி, எப்போதும் நீல நிற ஜெர்சி அணிந்து விளையாடுவதே பெருமையாக கருதுகிறோம் எனக் கூறியுள்ளார்.

'இந்த நிற ஜெர்சிதான் பெருமை - விராட் கோலி' ... 'கிண்டலடித்த ரசிகர்கள்'!

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பைதொடரில், எல்லா அணிகளும் மாற்று ஜெர்சி அறிவித்து, அதை ஒரே நிற ஜெர்சி கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில் அணிந்து பங்கேற்று வருகின்றன. இந்நிலையில் இந்திய அணி, இன்று இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து பங்கேற்க உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி பங்கேற்க உள்ள ஆட்டத்திற்கான, ஆரஞ்சு நிற ஜெர்சி அதிகாரப்பூர்வமாக கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதனிடையே, இங்கிலாந்துடனான போட்டியில் புதிய ஜெர்சி அணிந்து விளையாடுவது குறித்து கூறிய விராட் கோலி, 'நீலம் தான் எப்போதும் நமது வண்ணம். நீல வண்ண ஜெர்சியை அணியும் போது பெருமையாக கருதுகிறோம்.  புதிய ஜெர்சியில் உள்ள நீலம், ஆரஞ்சு வண்ணங்கள் எனக்கு பிடித்திருக்கிறது. புதிய ஜெர்சி உடை நிரந்தரமாக இருக்கும் என நினைக்கவில்லை.

ஒரு போட்டியில் மட்டும் புதிய ஜெர்சியில் விளையாடுவது நன்றாக இருக்கும்.  இதுவே தொடரும் என நினைக்கவில்லை' என்று கூறினார். இந்நிலையில் இந்திய அணியின் புதிய ஜெர்சியை ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.