'ஒட்டுமொத்தமா சொதப்பிய வீரர்கள்'... 'தனி ஒருவனாக போராடிய வீரர்’... தெறிக்கவிட்ட நியூசிலாந்து!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததன் மூலம், நியூசிலாந்து அணி 2-0 என ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

'ஒட்டுமொத்தமா சொதப்பிய வீரர்கள்'... 'தனி ஒருவனாக போராடிய வீரர்’... தெறிக்கவிட்ட நியூசிலாந்து!

நியூசிலாந்து, இந்திய அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. இதில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு குப்தில் (79), டெய்லர் (73*) ஆகியோர் கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்கள் எடுத்தது. எட்டக்கூடிய இலக்கை துரத்திய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால் (3) மோசமான துவக்கம் அளித்து அதிர்ச்சியை கொடுத்தார். மற்றொரு துவக்க வீரர் பிரித்வி ஷா (24) ஜேமிசனின் மிரட்டலான இன் சுவிங் பந்தில் போல்டானார்.

தொடர்ந்து வந்த கேப்டன் கோலி (15), ராகுல் (4) ஆகியோர் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர். ஒருபுறம் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து நடையை கட்ட மறுபுறம் நம்பிக்கை அளித்த ஸ்ரேயஸ் ஐயர் (52) அரைசதம் கடந்து அவுட்டானார். அடுத்து வந்த கேதர் ஜாதவ் (9) ஏமாற்றினார். பின் வந்த ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை அளித்தார். சர்துல் (18) வெளியேற, 9-வது விக்கெட்டுக்கு ஜடேஜா-சைனி ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி தடுத்த விக்கெட் சரிவை தடுத்த, அதே வேளையில் ரன்கள் சேர்க்கவும் தவறவில்லை.

இருவரும் பவுண்டரிகளாக விளாசினர். 9ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்த நிலையில் சைனியை (45) ஜேமிசன் போல்டாக்கினார். இருந்தாலும் ரவீந்திர ஜடேஜா தொடர்ந்து போராட்டமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் கடந்தார். இவர் 55 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். இதையடுத்து இந்திய அணி 48.3 ஓவரில் 251 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம் நியூசிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆட்டநாயகன் விருதை அறிமுக வீரர் ஜேமிசன் வென்றார். இரு அணிகள் மோதும் கடைசி போட்டி வரும் 11-ம் தேதி மவுண்ட் மவுங்கனியில் நடக்கிறது.