'தயவு செஞ்சு என்ன கூட்டிட்டு போங்க'...'10 நாள்ல எனக்கு கல்யாணம்'...'கதறும் கல்யாண பொண்ணு'!
முகப்பு > செய்திகள் > இந்தியாஎனக்கு சாதாரண காய்ச்சல் தான் இருப்பதாகவும், கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை என, புதுமண பெண் வீடியோ வாயிலாக தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் ஜோதி. இவர் சித்தூர் மாவட்டம் ஸ்ரீ சிட்டியில் உள்ள டிசிஎல் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் ஜோதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு வரும் 18ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதனிடையே அவர் பணி நிமித்தமாக சீனாவில் உள்ள வுஹானுக்கு அனுப்பப்பட்டார்.
இந்த சூழ்நிலையில் சீனாவில் கொரனோ வைரஸ் பாதிப்பு ஏற்பட, அங்குள்ள இந்தியர்களை இந்திய அரசு பத்திரமாக அழைத்து வரும் பணியில் ஈடுபட்டது. பல இந்தியர்கள் திரும்ப அழைத்து வரப்பட்ட நிலையில், ஜோதி சீனாவில் சிக்கி கொண்டார். விமானம் ஏறுவதற்கு முன்பாக அவருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறி அவரை விமானத்தில் செல்ல சீன மருத்துவர்கள் மறுத்து விட்டார்கள். இதையடுத்து தன்னை அழைத்து செல்ல அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இதனிடையே நேற்று மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்ட அவர், தனக்கு காய்ச்சல் மட்டும் தான் இருப்பதாகவும் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை எனவும் தெரிவித்துள்ள அவர், திருமணம் நடைபெற உள்ள என்னை உடனடியாக அரசு மீட்க வேண்டும் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.