'NOT ONLY FOR MY TEAM.. நாட்டுக்காகவும்தான்'.. சர்ச்சைகளுக்கு FULL STOP வைத்த வீரர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஉலகக் கோப்பை போட்டிக்கு பின், இந்திய அணி, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் மோதும் 3 வகையான போட்டிகள் அறிவிக்கப்பட்டன.
ஆனால் அதற்குள் கோலிக்கும், ரோஹித்துக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்ததாகவும், இந்த கருத்து வேறுபாடு காரணமாக இருவரின் ஆதரவாளர்களும் இரண்டாக பிளவுபட்டு கோஷ்டி மோதல் உண்டானதாகவும் சர்ச்சைகள் எழத் தொடங்கின. ஆகையால், குறைந்த ஓவர்கள் கொண்ட போட்டிகளுக்கு ரோஹித் கேப்டனாக வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் பரவின. இதற்கு அனுஷ்கா ஷர்மாவெல்லாம் காரணமாக இருப்பாரோ? என்கிற வகையில் வதந்திகள் பரவின.
ஆனால், செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலியோ, இதை முற்றிலும் மறுத்ததோடு, நம்ப முடியாததாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், இதுபோன்ற செய்திகள் வரும்போது அணியாகவும், வீரராகவும் குழப்பங்கள் உண்டாவதாகவும், அணிக்குள் சகோதரத்துவமும், நட்பும் இருப்பதால்தான் இத்தனை உயரத்தை அடைய முடிந்ததாகவும் குறிப்பிட்டார். அதோடு, ரோஹித் நன்றாக விளையாடும்போதெல்லாம் அவரை பாராட்டியிருப்பதாகவும் கோலி தெரிவித்தார்.
இந்நிலையில், இந்த பேச்சுகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ரோஹித் ஷர்மா தனது ட்விட்டரில், ‘நான் நடப்பது எனது அணிக்காக மட்டும் அல்ல; எனது நாட்டுக்காக’ என்று பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் ரசிகர்களிடையே புது ஆரோக்கியமான உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டி20 போட்டி வரும் சனிக்கிழமை(ஆகஸ்ட் 03) இரவு 8 மணிக்கு புளோரிடா மைதானத்தில் நடக்கிறது.
I don’t just walk out for my Team. I walk out for my country. pic.twitter.com/S4RFkC0pSk
— Rohit Sharma (@ImRo45) July 31, 2019