'ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க இவர் யார்?'... 'விராட் கோலியை விளாசிய முன்னாள் வீரர்'!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

மைதானத்தில் ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க விராட் கோலிக்கு உரிமை இல்லை என்று இங்கிலாந்தின் முன்னாள் வீரர் நிக் காம்ப்டன் தெரிவித்துள்ளார்.

'ரசிகர்களுக்கு அறிவுரை வழங்க இவர் யார்?'... 'விராட் கோலியை விளாசிய முன்னாள் வீரர்'!

கடந்த வருடம் நடந்த தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது, ஆஸ்திரேலிய வீரர்களான ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் பந்தை சேதப்படுத்தியதால் ஒரு வருடம் கிரிக்கெட் விளையாட தடை செய்யப்பட்டனர். தடை முடிந்ததால், உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணிக்காக ஆடிவருகின்றனர். தடையிலிருந்து திரும்பி வந்தாலும், பவுண்டரி லைனில் அவர்கள் இருவரும் ஃபீல்டிங் செய்யும்போது, இங்கிலாந்து ரசிகர்கள் கிண்டலடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. அப்போது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த ஸ்மித்தை, இந்திய ரசிகர்கள் 'சீட்டர்' என கிண்டலடித்தனர். இதைப் பார்த்த விராட் கோலி இந்திய ரசிகர்களைப் பார்த்து, ஸ்மித்திற்கு கைதட்டி வரவேற்பு கொடுங்கள். தேவையில்லாமல் கேலி செய்ய வேண்டாமென கையசைத்து அறிவுறுத்தினார். இதையடுத்து ஸ்மித், விராட் கோலியின் இந்த செயலுக்கு கைகொடுத்து பாராட்டு தெரிவித்தார்.

இதனிடையே, இங்கிலாந்தின் முன்னாள் வீரரான நிக் காம்படன், விராட் கோலியை விளாசித் தள்ளியுள்ளார். ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்வதற்கு உரிமையில்லை என்று நிக் கூறியுள்ளார். விராட் கோலி கிரிக்கெட் விளையாடினால் மட்டும் போதும் என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.