‘என்னது இதுக்கெல்லாம் கூட இனி சன் ஸ்கிரீன் போடணுமா..!’ புதிய ஆய்வு முடிவுகள்..

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்
By |

வெயிலால் ஏற்படும் சரும பாதிப்புகளுக்கு சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் நாம் கணினி, செல்ஃபோன் ஆகியவற்றிலிருந்து வெளியாகும் புளூ லைட் கதிர்களைக் கண்டுகொள்வது இல்லை.

‘என்னது இதுக்கெல்லாம் கூட இனி சன் ஸ்கிரீன் போடணுமா..!’ புதிய ஆய்வு முடிவுகள்..

புளூ லைட் கதிர்கள் கண்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனப் படித்திருப்போம். ஆனால் சருமத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. தற்போது பலருக்கும் உள்ள இளமையிலேயே வயதான தோற்றம், சரும வறட்சி, சரும வெடிப்புகள் போன்ற பிரச்சனைகள் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்திருப்பதாலேயே ஏற்படுவதாக இதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புளூ லைட் கதிர்கள் சருமத்தின் ஆழம் வரை சென்று நிறத்தை மங்கச் செய்து சரும பாதிப்பை ஏற்படுத்துவதாக இதனைக் கண்டறிந்து வெளியிட்டுள்ள ஆர்கானிக் ஹார்வஸ்ட் என்ற நிறுவனம் கூறுகிறது. இந்தக் கதிர்களை எதிர்கொள்ளும் வகையில் சன் ஸ்கிரீனையும் தயாரித்து வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.

இது பற்றிப் பேசியுள்ள அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ ராஹுல் அகர்வால், “நீங்கள் பயன்படுத்தும் திரைகளின் வெளிச்சத்தைக் குறைத்துப் பயன்படுத்துங்கள். ஆனாலும் அது சரும பாதிப்பைக் குறைக்குமா என்றாலும் உறுதி இல்லை” எனக் கூறியுள்ளார்.

SUNSCREEN, RESEARCHRESULTS