‘தோனி இதுலையும் வித்தியாசம்தான்’.. லேட்டா வந்தா ‘தல’ கொடுக்கும் தரமான தண்டனை.. வெளியான சீக்ரெட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதாமதமாக வரும் வீரர்களுக்கு தோனி வழங்கும் தண்டனை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காக இரண்டு உலகக்கோப்பையை பெற்றுதந்துள்ளார். தற்போது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி ஒரு விக்கெட் கீப்பராக தனது பணியை சிறப்பாக செய்துவருகிறார். தற்போது விராட் கோலி இந்திய அணியின் கேப்டனாக வழி நடத்தி வருகிறார்.
மேலும் இக்கட்டான சூழ்நிலையில் தோனி ஒரு சீனியர் வீரராக ஆலோசணைகளை வீரர்களுக்கு வழங்கி வருகிறார். மேலும் தோனி கேப்டனாக களத்தில் இருக்கும் போது பந்துவீச்சாளர்களுக்கு ஆலோசனையின் மூலம் நம்பிக்கை அளிப்பார்.
இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் மனநல ஆலோசகர் பேடி அப்டான், பேர்ஃபூட் என்ற தனது புத்தகத்தை கொல்கத்தாவில் வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் இந்திய அணியில் தோனி மனநிலை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேடி அப்டான்,‘தோனியின் மிகப்பெரிய பலம் அவரது அமைதி. பல கடினமான சூழ்நிலைகளில் வீரர்களை அமைதியாக வழி நடத்துவார்’ என தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர்,‘நான் மனநல அலோசகராக இந்திய அணியில் சேரும் போது, டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக அனில் கும்ப்ளேவும், ஒருநாள் போட்டிக்கு கேப்டனாக தோனியும் இருந்தனர். அப்போது பயிற்சிக்கு தாமதமாக வரும் வீரர்களுக்கு வழங்கும் தண்டனை குறித்த அலோசனையில், கும்ப்ளே தாமதமாக வரும் வீரருக்கு ரூ.10,000 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என கூறினார். ஆனால் தோனி, யார் தாமதமாக வந்தாலும் அணியில் இருக்கும் அனைவருக்கும் ரூ.10,000 ஆயிரம் அபராதம் விதிக்க வேண்டும் என அதிரடியான கூறினார். இந்த அறிவிப்பு வந்ததில் இருந்து யாரும் தாமதமாக வந்தது இல்லை’ என பேடி அப்டன் தெரிவித்துள்ளார்.