“அட என்னா ஸ்பீடு”!.. ‘4 மணி நேரத்துல உலக சாதனை படைச்ச 7 வயது சிறுவன்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்அபினவ் என்ற 7 வயது சிறுவன் 82 கிமீ தூரத்தை 3 மணி நேரம் 40 நிமிடத்தில் கடந்து உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தை சேர்ந்த 7 வயது சிறுவன் அபினவ் தனது 5 வயது முதலே சைக்கிள் ஓட்டுவதில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறார். இந்நிலையில், பாண்டிச்சேரி டு மாமல்லபுரம் வரை உள்ள 82 கி.மீ தூரத்தை 4 மணிநேரத்திற்குள் கடக்க திட்டமிட்டு ட்ரெயினிங்கும் எடுத்துள்ளார்.
இதையடுத்து, கடந்த வாரம் பாண்டிச்சேரியில் காலை 4.30 மணிக்குக் கிளம்பி காலை 8.20 மணிக்கு மாமல்லபுரத்தை அடைந்துள்ளார். 82 கிலோ மீட்டர் தூரத்தை 3 மணிநேரம் 40 நிமிடத்தில் கடந்து " ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்"சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
இதுகுறித்து கூறிய அபினவ், “நான் தினமும் ஸ்கூல் முடிச்சு வந்து அரைமணி நேரம் சைக்கிள் ஓட்டுவேன். என்னுடைய ஐந்து வயதில் சைக்கிள் மூலம் சாதனை படைக்கிற எண்ணம் வந்துச்சு”. தனது 5 வயதில் 1000 பேருடன் சேர்ந்து சைக்கிளிங் செய்து கின்னஸ் ரெக்கார்டு பண்ணினேன்.
மேலும், சைக்கிளிங் செய்யுறவங்களுக்கு மூச்சுப் பயிற்சி, கவனம், சரியான உணவு முறை எல்லாமே முக்கியம். அதில் எல்லாம் ட்ரெயின் ஆன பின்தான் உலக சாதனைக்கு பயிற்சி மேற்கொள்ள ஆரம்பிச்சேன். அடுத்தபடியாக கின்னஸ் சாதனைக்கும் பயிற்சிகள் எடுத்து வருகிறேன். இன்னும் ஓராண்டுக்குள் கின்னஸ் கனவும் நிறைவேறும்" என்று கூறியுள்ளார்.