'ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் இல்லை'?...அப்போ எங்க தான் நடக்க போகுது?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் சாம்பியன் என்பதால்,ஐபிஎல் இறுதிப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 12-ம் தேதி நடைபெறக் கூடும் என தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனிடையே சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு இதுவரை அனுமதி அளிக்கப்படாததால் இறுதி போட்டியானது சென்னையில் நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

'ஐபிஎல் இறுதி போட்டி சென்னையில் இல்லை'?...அப்போ எங்க தான் நடக்க போகுது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 38 ஆயிரம் பேர் அமர்ந்து போட்டியை ரசிக்கலாம்.ஆனால் கடந்த 8 வருடங்களாக ஐ, ஜே, கே ஆகிய 3 கேலரிகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் உள்ளது. இதனால் சுமார் 12 ஆயிரம் இருக்கைகள் ரசிகர்கள் இன்றி காலியாக காட்சியளிக்கின்றன.இதனிடையே நடப்பு ஐபிஎல் போட்டிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் கடும் வரவேற்பு நிலவுகிறது.

அனுமதி வழங்கப்படாத  3 கேலரிகளையும் தவிர்த்து மீதம்உள்ள 26 ஆயிரம் இருக்கைகளும் ரசிகர்களின் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட்கள் கிடைக்காமல் போட்டி ஆரம்பித்த பிறகும் மைதானத்திற்கு வெளியே காத்திருக்கும் சூழ்நிலையில் இருக்கிறார்கள்.

இந்நிலையில் டெல்லியில் நேற்று பிசிசிஐ அமைப்பை நிர்வகிக்கும் நிர்வாகக்குழு மற்றும் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இதில் 3 கேலரிகளின் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதில் இறுதிப் போட்டியை நடத்துவதற்கு மாற்று இடமாக ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தையும், பிளே ஆஃப் சுற்று ஆட்டங்களை நடத்துவதற்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தை மாற்று இடமாகவும் தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில் '“தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்துடன் ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.காலியாக உள்ள 3 கேலரி குறித்த பிரச்சனையை தீர்ப்பதற்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.அதற்குள் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு சம்பந்தப்பட்ட துறையிடம் இருந்து சான்றிதழ் பெறாவிட்டால் இறுதிப் போட்டி ஹைதராபாத்துக்கு மாற்றப்படும்.

மேலும் பிளே ஆஃப் சுற்றின் 3 ஆட்டங்களும் பெங்களூருவில் நடத்தப்படும். 2018-ம் ஆண்டு சன் ரைசர்ஸ் ஹைதாராபாத் அணி 2-வது இடத்தை பிடித்திருந்ததன் அடிப்படையில் இறுதிப் போட்டியை நடத்தும் உரிமையை பெறுவார்கள்” என்றார்.

IPL2019, IPL, CHENNAI-SUPER-KINGS, SUNRISERS-HYDERABAD, PLAYOFFS, FINAL MATCH, M.A. CHIDAMBARAM STADIUM