'மாட்டுக் கறி விக்கறயா? அப்டீன்னா பன்றி இறைச்சி சாப்பிடு'.. முதியவர் மீது தாக்குதல்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

அசாமில் மாட்டுக்கறி விற்றுக் கொண்டிருந்த முஸ்லீம் முதியவரைத் தாக்கி,  அவரைப் பன்றி இறைச்சி சாப்பிடக் கட்டாயப்படுத்தியச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

'மாட்டுக் கறி விக்கறயா? அப்டீன்னா பன்றி இறைச்சி சாப்பிடு'.. முதியவர் மீது தாக்குதல்!

68 வயது முஸ்லீம் முதியவர் செளகத் அலி, அசாம் மாநிலத்தில் உள்ள பிஸ்வநாத் மாவட்டத்தில் கடந்த ஞாயிறன்று மாட்டுக்கறி வியாபாரம் செய்து கொண்டு இருந்தார். அப்போது, அங்கே சென்ற கும்பல் ஒன்று, மாட்டுக்கறி விற்பதற்காக அவரை அடித்து உதைத்து, முட்டிப் போடவைத்து, பன்றிக் கறியை உண்ண வைத்து அட்டூழியம் செய்துள்ளது.

செளகத் அலியை அடித்து உதைத்தக் கும்பல், அவரை மாட்டிறைச்சி விற்க உரிமம் பெற்றுள்ளாரா என்று கேட்டு மிரட்டியது. அத்துடன், 'நீ வங்க தேசத்தைச் சேர்ந்தவனா என்றும், உனது பெயர் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் உள்ளதா?' எனவும் அந்தக் கும்பல் கேள்விகளை எழுப்பியதாகத் தெரிகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தாக்குதல் நடத்தியதாக தொடர்பாக 5 பேர் விசாரிக்கப்பட்டு வருவதாக போலீசார் கூறியுள்ளனர். பிஸ்வநாத் மாவட்டம் தெஸ்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. அங்கு நாளை மறுநாள் ஏப்ரல் 11-ம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது

பி.ஜே.பி. தனது தேர்தல் அறிக்கையில் “ குடிமக்களின் தேசியப் பதிவு பிரச்சினைகள் விரைந்து முடிக்கப்படும்” என்று கூறியுள்ளது. இந்நிலையில் இந்தத் தாக்குதல் சம்பவம்  இணையதளத்தில் வைரலாக பரவி வருகின்றது.

ASSAM, SELLINGBEEF, EATPORK, BANGLADESHI, VIOLENCE