‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் நியூஸிலாந்து கேப்டன் கேன்வில்லியம்சன் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

‘உலகக்கோப்பையில் புதிய சாதனை’.. முன்னாள் இலங்கை கேப்டனை பின்னுக்கு தள்ளிய வில்லியம்சன்.!

இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்துக்கு இடையேயான உலகக்கோப்பை இறுதிபோட்டி இன்று(14.07.2019) லாட்ர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் கப்தில் மற்றும் ஹென்றி நிக்கோல்ஸ் களமிறங்கினார். இதில் கப்தில் 18 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இதனை அடுத்து களமிறங்கிய நியூஸிலாந்து கேப்டன் கேன்வில்லியம்சன், ஹென்றி நிக்கோல்ஸுடன் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆட ஆரம்பித்தார். இதில் வில்லியம்சன் 30 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் உலகக்கோப்பையில் அதிகரன்கள்(578) அடித்த கேப்டன் என்ற சாதனையை வில்லியம்சன் படைத்துள்ளார். மேலும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்தனேவின்(548) சாதனையை முறியடித்துள்ளார். இந்நிலையில் 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை நியூஸிலாந்து அணி எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஹென்றி நிக்கோல்ஸ் 55 ரன்களும், டாம் லதம் 47 ரன்களும் எடுத்தனர்.

ICCWORLDCUP2019, ENGVNZ, KANE WILLIAMSON, CWC19FINAL