5, 6 வருடங்களுக்கு முன்பே.. ‘இறுதிப்போட்டியைத் துல்லியமாகக் கணித்த பிரபல வீரர்..’

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியைத் தோற்கடித்துக் கோப்பையை வென்றுள்ளது இங்கிலாந்து.

5, 6 வருடங்களுக்கு முன்பே.. ‘இறுதிப்போட்டியைத் துல்லியமாகக் கணித்த பிரபல வீரர்..’

லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் 241 ரன்கள் எடுத்ததால் மேட்ச் ட்ரா ஆனது. பின்னர் சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. அதிலும் இரு அணிகளும் ஒரே ரன்கள் எடுக்க மேட்ச் ட்ரா ஆனது. இதனால் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்தப் போட்டியில் சூப்பர் ஓவரில் பந்துவீசிய ஜோஃப்ரா ஆர்ச்சர் கடைசி ஓவரில் அதிக ரன் கொடுக்காமல் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இதில் ஆச்சரியமான விஷயம் ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்பே இறுதிப் போட்டியில் நடந்த நிகழ்வுகளை ஆர்ச்சர் ட்வீட் செய்துள்ளார். அது அப்படியே தற்போது இந்தப் போட்டியில் நடந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2015ஆம் ஆண்டே ட்விட்டரில் இவர், “சூப்பர் ஓவர் பற்றியெல்லாம் கவலையில்லை” எனப் பதிவிட்டுள்ளார். அதேபோல இறுதி ஆட்டத்தில் சூப்பர் ஓவர் வீசப்பட்டது. மேலும் இன்னொரு ட்வீட்டில் “6 பந்துகளில் 16 ரன்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.  இந்தப் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற 6 பந்துகளில் 16 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார் ஆர்ச்சர்.

இதைப் போலவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியிலும் நடந்துள்ளது. ஆரோன் பின்ச் டாஸ் வென்றார், நடையைக் கட்டினார் என இவர் முன்னர் ட்வீட் செய்திருந்தது போலவே அவருடைய விக்கெட்டையும் ஆர்ச்சரே வீழ்த்தியுள்ளார். மேலும் இவர் பழைய ட்வீட்டுகளில் குறிப்பிட்டுள்ளவை பலவும் இந்த உலகக் கோப்பை தொடரில் நடந்ததால் அனைவரும் வியப்படைந்துள்ளனர்.

ICCWORLDCUP2019, NZVSENG, JOFRAARCHER, SHOCKING, PREDICTONS