'உயிரோட வேணும்னா..' 3 வருஷத்துக்கு பிறகு போன் செய்து கடத்தல்காரர்கள் வைக்கும் டிமாண்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2016-ஆம் ஆண்டு மே 12-ஆம் தேதி, உத்தரபிரதேசம் நொய்டாவில் வசிக்கும் சஞ்சய் ராவத் என்பவரின் மகள் காசிஷ் காணாமல் போனார். பதறிப் போய் காசிஷின் பெற்றோர்கள் போலீஸாரிடம் புகார் அளித்தனர்.
அதன் பின்னர் பல்வேறு பகுதிகளில் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியும் சிறுமி கிடைக்காததால் அதிருப்தியான பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் போலீஸாரை எதிர்த்து போராட்டங்களையும் நடத்தினர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் மிகவும் வருத்தத்தில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில், ஆச்சர்யப்படும் வகையில் 3 வருடங்கள் கழித்து தற்போது கடந்த வாரம் ஜூலை 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரையிலான இடைப்பட்ட காலத்தில் 10 முறைக்கும் மேல், காசிஷின் பெற்றோருக்கு போன் செய்த மர்ம நபர்கள், தாங்கள் பஞ்சாபில் இருந்து அழைப்பதாகவும், 10 லட்சத்துடன் வந்தால் சிறுமி காசிஷை உயிரோடு காண முடியும் என்றும் மிரட்டியுள்ளனர்.
இதனையடுத்து இந்த வழக்குக்குள் திரும்பவும் எண்ட்ரி கொடுத்த காவல்துறையினர், போன் செய்த மர்ம நபரை ட்ரேஸ் செய்தபோது தெலுங்கானா, மேற்குவங்கம் என சிக்னல் மாறி மாறி காட்டியதால் குழம்பித் தவித்துள்ளனர். மேலும், சிறுமி காணமல் போன தகவலைத் தெரிந்துகொண்டு மர்ம நபர்கள் இதுபோன்று பொய்யாக போன் செய்து பணம் பறிக்க முயல வாய்ப்பிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.