'அவர் தான் எங்களோட பெரிய சொத்து'...'உலககோப்பை'யில எப்படி...கலக்க போறாருனு பாருங்க!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் 51வது லீக் போட்டி மும்பையில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின .டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த மும்பை இந்தியன்ஸ் அணி,20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 162 ரன்கள் சேர்த்தது. விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் 69 ரன்கள் குவித்தார். ஹைதராபாத் அணியில் கலீல் அகமத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியும் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் எடுத்து.இதனால் போட்டி சூப்பர் ஓவர் போட்டியாக மாறியது. இதனால் ரசிகர்களுக்குள் பரபரப்பு தொற்றிக் கொண்டது.சூப்பர் ஓவரில் முதலில் பந்துவீசிய மும்பை அணியில், பும்ரா பந்துவீசினார். சிறப்பாக பந்துவீசிய அவர் 8 ரன்களை மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்து ஹைதராபாத் அணியை ஆல் அவுட் செய்தார்.இதையடுத்து களமிறங்கிய மும்பை,ஹர்திக் பாண்ட்யா அடித்த சிக்ஸர் மூலம் அபாரமான வெற்றியினை பதிவு செய்தது.இதையடுத்து 16 புள்ளிகளை பெற்று மும்பை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது.
போட்டிக்கு பின்பு பேசிய கேப்டன் ரோகித் ஷர்மா ''இந்த வெற்றி எங்களுக்கு புதிய உற்சாகத்தை அளித்திருக்கிறது.எங்களது வீரர்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் மட்டுமே இந்த வெற்றியினை பெற முடிந்தது.அதிலும் பும்ராவின் பந்து வீச்சு எங்களுக்கு மிகப் பெரிய பலமாக இருந்தது.
அவர் ஓவ்வொரு போட்டியிலும் தன்னை மெருகேற்றி கொண்டே வருகிறார்.அவர் மற்ற பௌலர்களுக்கு தலைமை ஏற்று வழிநடத்தும் திறனை பெற்றுள்ளார்.நிச்சமாக அவர் உலகக்கோப்பையில் தனது முழுத் திறனையும் வெளிப்படுத்துவர்'' என தெரிவித்தார்.அதோடு அவர் எங்களுக்கு மிகப்பெரிய சொத்தாக இருக்கிறார் என உணர்ச்சி பொங்க தெரிவித்தார்.