சிப்ஸ்க்கான உருளைக்கிழங்கு விவகாரம்.. வாபஸ் வாங்கிய 'பிரபல குளிர்பான' நிறுவனம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா
By |

குஜராத் உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிராகத் தொடர்ந்த நீதிமன்ற வழக்கை, வாபஸ் பெற ஒப்புக் கொண்டதாக பெப்ஸி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிப்ஸ்க்கான உருளைக்கிழங்கு விவகாரம்.. வாபஸ் வாங்கிய 'பிரபல குளிர்பான' நிறுவனம்!

குளிர்பான தயாரிப்பில் உலக அளவில் பிரசித்திப் பெற்றது, அமெரிக்காவின் பெப்சி நிறுவனம். இந்நிறுவனம், தன்னுடைய லேஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக,  சில உருளைக்கிழங்கு வகைகளுக்கு உலக அளவில் காப்புரிமை பெற்றுள்ளது. தாங்கள் பதிவு செய்து வைத்திருக்கும் எஃப் சி 5 ரக உருளைக் கிழங்கினை சாகுபடி செய்ததாக, குஜராத்தின் சபர்கந்தா, ஆரவல்லி மாவட்டத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் பயிரிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, காப்புரிமை சட்டத்தின் கீழ் பெப்சி நிறுவனம், தலா ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு 4 விவசாயிகள் மீது  வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு விவசாயிகள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் மீண்டும் குளிர்பான நிறுவனங்களுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் போராட விவசாயிகள் அமைப்புகள் ஆலோசனை நடத்தின. ஏற்கனவே குளிர்பான நிறுவனங்கள், இந்தியாவில் ஆலைகளை நிறுவி, இயற்கை கொடையான தண்ணீரை லட்சக்கணக்கான லிட்டர் அளவுக்கு இலவசமாக உறிஞ்சி எடுத்துக் கொண்டு, அதை கொள்ளை லாபத்துக்கு விற்பதாக குஜராத்தில் போராட்டங்கள் நடந்தன.

இதனிடையே குஜராத் அரசு விவசாயிகளுக்கு சட்ட ரீதியான உதவிகளை வழங்க முன்வந்தது. மேலும் நீதிமன்றத்திற்கு வெளியே இந்த பிரச்னையை பேசி தீர்க்க அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி நடவடிக்கை எடுத்தார். பிரச்சனை பெரிதானதை தொடர்ந்து, விவசாயிகளுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற பெப்சி நிறுவனம் முடிவு செய்தது. இதை முறைப்படி பெப்சி நிறுவனம் நேற்று எழுத்துப்பூர்வமாக அறிவித்தது. இதனை பெப்சிக்கோ நிறுவனத்திள் இந்தியச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

POTATO, PESICO, GUJARATH