5 'முக்கிய' வீரர்கள்.. இந்த ஐபிஎல்லில்.. தங்கள் 'சொந்த' அணியை மிஸ் பண்ணலாம்.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு
By |

வரும் 2020-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் வருகின்ற டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு 10 அணிகள் மற்றும் போட்டிகளுக்கான நேரம் அதிகம் ஆகிய காரணங்களால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு அணியில் இருந்தும் சில வீரர்களை அந்த அணிகள் விடுவிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அப்படி யாரெல்லாம் இந்த வருடம் தங்கள் அணிக்கு விளையாட முடியாமல் போகலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

5 'முக்கிய' வீரர்கள்.. இந்த ஐபிஎல்லில்.. தங்கள் 'சொந்த' அணியை மிஸ் பண்ணலாம்.. என்ன காரணம்?

1. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - டி. நடராஜன்

கடந்த 2018-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணியால் ரூபாய் 40 லட்சத்துக்கு வாங்கப்பட்ட நடராஜன் இந்த ஆண்டு அந்த அணியால் விடுவிக்கப்படலாம். அந்த அணி சிறந்த பந்துவீச்சாளர்களை கொண்டு இருப்பதால் பேட்டிங்கை வலிமைப்படுத்த வேறு ஒரு வீரரை எடுக்கலாம்.

2. சென்னை சூப்பர் கிங்ஸ் - கே.எம்.ஆசிப்

சென்னை அணி  தங்களது பந்து   வீச்சை மேம்படுத்த தீபக் சாஹர், லுங்கி இங்கிடி, ஆசிப் போன்ற பந்து வீச்சாளர்களை எடுத்தது. இதில் ஆசிப் தவிர மற்ற இருவரும் தங்களது  பந்து வீச்சை நிரூபித்து விட்டனர். ஆசிப் நிரூபிக்க தவறியதால் அவரை இந்த ஆண்டு சென்னை அணி விடுவித்து விட்டு, அவருக்கு பதிலாக வேறு ஒரு பந்து வீச்சாளரை எடுக்கலாம் எடுக்கலாம்.

3. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பிரசித் கிருஷ்ணா

கமலேஷ் நாகர்கோட்டி காயம் காரணமாக கொல்கத்தா அணி பிரசித் கிருஷ்ணாவை எடுத்தது. ஆனால் 2 சீசன்கள் விளையாடியும் கிருஷ்ணாவால் அணியின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் இந்த ஆண்டு இவரை விடுவித்து விட்டு வேறு ஒரு வீரரை எடுக்க வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.

4. ராஜஸ்தான் ராயல்ஸ் - ராகுல் திரிபாதி

2018-ம் ஆண்டு மீண்டுவந்த ராஜஸ்தான் அணி ராகுல் திரிபாதியை 3.4 கோடிகள் கொடுத்து வாங்கியது. அந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய திரிபாதி அடுத்த ஆண்டில் அவ்வாறு விளையாட தவறிவிட்டார். இதனால் இந்த ஆண்டு ஏலத்தில் ராஜஸ்தான் அணி இவரை விடுவித்து விட்டு வேறு ஒருவரை எடுக்கலாம்.

5.கிங்ஸ் லெவன் பஞ்சாப் - வருண் சக்கவர்த்தி

2019-ம் ஆண்டில் வருண் சக்கவர்த்தியை 8.4 கோடிகள் கொட்டிக்கொடுத்து பஞ்சாப் அணி வாங்கியது. ஆனால் அதற்கு ஏற்ற தாக்கத்தை இவர் அணியில் ஏற்படுத்தவில்லை. இதனால் இவரை விடுவித்து விட்டு வேறு ஒரு பேட்ஸ்மேனை அந்த அணி வாங்கலாம்.